சிங்கம் சூர்யாவை மிஞ்சிய நிஜ சூர்யா! நெகிழ்ச்சி சம்பவம்

828

சென்னையில் பெண் மருத்துவரிடம் செயின் பறித்த திருடரை விரட்டி பிடித்த சூர்யாவுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தான் சொன்னபடி தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக் வேலையை வாங்கி கொடுத்துள்ளார்.

பெண் மருத்துவர் ஒருவரிடமிருந்து 10 சவரன் நகைகயை பறித்துக்கொண்டு ஓடிய திருடனை, சூர்யா வேகமாக விரட்டி சென்று திருடனை பிடித்துள்ளார்.மன உறுதியோடு திருடனை விரட்டிப்பிடித்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை காவல்துறை சார்பில் சிறுவன் சூர்யாவுக்கு ரொக்க பரிசையும் வழங்கினார்.

இதனிடையே, சென்னை டிவிஎஸ் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக் வேலைக்கு சிபாரிசு செய்து சூர்யாவுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார்.மேலும் ரோட்டரி கிளபை சேர்ந்த நிர்வாகிகள் ரூ.2 லட்சம் காசோலையையும், தனியார் கல்விக்குழுமம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் சூர்யாவுக்கு வழங்கியது.

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான் மற்றவர்கள் ஷூ அணிந்து நல்ல உடையுடன் வேலைக்குச் செல்வதை ஏக்கத்துடன் பார்ப்பேன். நாம் இப்படிப் போக முடியுமா? படிக்காத நாம் எங்கே அப்படிப் போக முடியும் என என்னை நானே தேற்றிக்கொள்வேன்,

ஆனால், காவல் ஆணையர் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டதன் மூலம் எனது கனவை நிறைவேற்றி வைத்துள்ளார்.

எனது குடும்பத்தின் பெரியவராக காவல் ஆணையரைப் பார்க்கிறேன். நான் செய்த செயலை உலகறியச் செய்து என்னைப் பாராட்டி வேலையும் வாங்கிக் கொடுத்த அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என சூர்யா கூறியுள்ளார்.