சிங்கம் சூர்யா கெட்டப்பில் 9 பெண்களை திருமணம் செய்த ஐபிஎஸ் அதிகாரி : வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

719

சென்னையில் சிங்கம் சூர்யா கெட்டப்பில் போலி ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வந்து 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட மணிகண்டன் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மாயாஜால் பின்புறம் உள்ள பண்ணை வீட்டுக்கு கடந்த வாரம் வட இந்தியாவிலிருந்து ஐபிஎஸ் அதிகாரியைப் போல கம்பீரமாக வெண்ணிற பொலீரோ ஜீப்பில் வந்து இறங்கியுள்ளார்.

இங்குள்ள பண்ணை வீடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் சிறப்பு அதிகாரியாக அனுப்பப்பட்டவர் என்று அங்குள்ளவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

உடனே அதன் உரிமையாளர் அங்கிருந்த பணியாளர்கள் இவருக்கு ராஜ மரியாதை கொடுத்துள்ளனர். இதே போன்று பல்வேறு பண்ணை வீடுகளுக்கு சென்று தன்னை ஐபிஎஸ் அதிகாரி என கூறி பணம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், அங்கு வந்த லோக்கல் பொலிசார், பொலிஸ் ஜீப் ஒன்று நிற்பதையும் அருகில் மணிகண்டன் அதிகாரி நிற்பதையும் பார்த்து சல்யூட் அடித்துள்ளனர்.

சல்யூட் அடித்தாலும் பொலிசாரின் மனதுக்குள் இவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இவரை கண்காணித்துள்ளனர். அப்போது, உங்களை அடையாறு துணை ஆணையர் பார்க்க வேண்டும் என அழைத்துள்ளார், என மணிகண்டனிடம் லோக்கல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, இரண்டு மூன்று கேள்விகள் கேட்டவுடனேயே போலி அதிகாரி என்று அடையாறு துணை ஆணையர், மணிகண்டனை அடையாளம் கண்டுகொண்டார்.

இதனைத்தொடாந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

பிடெக் முடித்துள்ள மணிகண்டனுக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும் பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே இவரது ஆசையாக இருந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் நண்பர் ஒருவரின் உதவியுடன் பொலிஸ் சீருடையை பெற்றுக்கொண்டு, ஆடம்பரமாக வாழ தன்னை ஐ.பி.எஸ். அதிகாரி என்று சொல்லியதோடு, சைரன் வைத்த காரில் வலம் வந்துள்ளார். காரில் பொலிஸ் என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி வைத்துள்ளார்.

2013-ம் ஆண்டு. அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், ”நான் ஐபிஎஸ் அதிகாரி. துணை ஆணையராக உள்ளேன், தேர்வு எழுதி ட்ரெய்னிங்கில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். தான் புழல் சிறையில் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறிய அவர் பெரவள்ளூரில் ஏராளமான இளைஞர்களை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளார்.

ஆங்கிலம் பேசுவதில் தனக்குள்ள திறமையைப் பயன்படுத்திக்கொண்டு படித்த இளம்பெண்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். 2014-ம் ஆண்டு பால மணிகண்டனிடம் ஏமாந்த பெண்கள் இவரது தோற்றம், நுனி நாக்கு ஆங்கிலத்தை நம்பி தங்களை இழந்துள்ளனர்.

இப்படி பால மணிகண்டனிடம் ஏமாந்தவர்கள் 9 பெண்கள். இவர்களில் 2 பேர் மருத்துவர்கள், 2 பேர் பொறியாளர்கள். தனது பேஸ்புக் பக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரி என குறிப்பிட்டுள்ளார்.

அதில், புகைப்படங்களை பதிவேற்றம் செய்து பேஸ்புக் மூலம் பல பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளார். மணிகண்டனை ஐ.பி.எஸ். அதிகாரி என்று நம்பி பழகியவர்களை அவர் ஏமாற்றியுள்ளார்.

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து, மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

மணிகண்டன் 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வெளியே வந்த இவர் இடைப்பட்ட காலத்தில் மீண்டும் போலி அதிகாரிகயாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது, கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது