சித்தி மகனுடன் தகாத உறவு…. குழந்தையை பெற்றெடுத்த 15 வயது பள்ளி மாணவி!!

1368

திருவொற்றி….

திருவொற்றியூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர், காந்தி தெருவை சேர்ந்த 15 வயது சிறுமி வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

அந்த சிறுமி ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக தாய் அழைத்துச் சென்றார். அப்போது மாணவி 10 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது மாணவிக்கு பிரசவ வலி இதற்குள் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அப்போது சிறுமிக்கு சிறிது நேரத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறகு இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த சித்தியின் மகன் முகேஷ் என்பவர் முறைதவறி மாணவியுடன் தகாத முறையில் நடந்து உள்ளார்.

இதில் கர்ப்பமான மாணவி இதுபற்றி பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார். மேலும் பள்ளிக்கும் வழக்கம்போல் சென்று வந்தார். இதனால் அவர் மீது பள்ளியிலும் மற்றும் பெற்றோருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு மாணவி மருத்துவமனைக்கு சென்ற போதுதான் இந்த விஷயம் வெளியே தெரிந்தது.

மாணவியை கர்ப்பமாக்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த உறவினரான முகேஷ் என்பவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள முகேசை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.