சினிமா ஆசைகாட்டி இளம் பெண்களை அழைத்து வந்து 3 ஆசாமிகள் செய்த செயல் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!

660

தமிழகத்தில் சினிமா ஆசைகாட்டி இளம் பெண்களை தனியார் விடுதியில் தங்க வைத்து அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த மூன்று பேரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த செல்வகுமார், பவானியைச் சேர்ந்த ஞானவேல் மற்றும் முத்துகுமார் ஆகியோர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோயில் பகுதியில் இருக்கும் இளம்பெண்களை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி அவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர்.

அதன் பின் அந்த பெண்களை சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்கிருக்கும் தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அப்போது அந்த பெண்களிடம் இந்த மூவரும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அவர்களிடமிருந்து தப்பி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் செல்வகுமார், ஞானவேல், முத்துக்குமார் ஆகிய மூவரும் மீண்டும் காஞ்சிகோயில் பகுதிக்கு அருகே வருகை தந்து சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பெண் ஒருவரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.

இதையறிந்த பொதுமக்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதன் பின் அந்த மூவரையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.