சினிமா பாணியில் சொத்துக்காக பெற்றோர் செய்த கொடூரம்!!

598

அரியலூர் மாவட்டத்தில் சினிமா பட பாணியில் சொத்துக்காக தனது மருமகள் மற்றும் மகனை கொலை செய்துள்ள பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிந்தராசு-லோகம்மாள் தம்பதியினருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் குமாரின் மனைவி அமராவதியின் அம்மா வீட்டில் நிறைய நிலம், சொத்துக்கள் உள்ளன.

அந்த சொத்துக்கள் அனைத்தும் அமராவதியையே சேரும் என்பதால், கோவிந்தராசு தன்னுடைய சொத்துக்களை மற்ற இரண்டு மகன்களுக்குத்தான் கொடுப்பேன் எனவும், குமாருக்கு கொடுக்க மாட்டேன் எனவும் பலமுறை சொல்லியிருக்கிறார்.

இதனால், சொத்துப் பிரச்சனை தொடர்பாக அரியலூா் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்றுவருகிறது. இதில் 3 மகன்களுக்கும் சமமாக சொத்துக்களை பிரித்துகொடுக்குமாறு தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

இதனால், மாமனார்- மாமியார் மற்றும் ராதாகிருஷ்ணனும் அவரது மனைவி செல்வி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அமராவதியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.பின்னா், வேலைக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய மகன் குமாரையும் அடித்து, வயிற்றில் கத்தியால் குத்திக் கொலைசெய்ய முயன்றுள்ளனர்.

கத்திக்குத்து பட்ட குமார் அங்கிருந்து தப்பித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பொலிசில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.