பின்னணிப் பாடகி சின்மயி
பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார்.
இந்த பாலியல் புகாரை அடுத்து சின்மயி பாடுவதை நிறுத்திக்கொள்ளப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.
வரும் 7ம் தேதி அவர் சென்னையில் ஒரு பிரபல மாலில் concert ஒன்றில் பாடுவதாக இருந்தது. ஆனால் அது திடீரெனெ தள்ளிப்போய் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. “நான் தொடர்ந்து பாடுவேன். அது என் வேலை” என சின்மயி அதிரடியாக கூறியுள்ளார்.