சிறுநீர் கழிக்கும் போது நிகழ்ந்த துயரம் : தனது ஆணுறுப்பை கோடாரியால் வெட்டிய நபர்!!

1572

மத்தியப் பிரதேச மாநிலம்…..

மத்தியப் பிரதேச மாநிலம், தமோஹ் மாவட்டத்தில் மெஹ்ரோன் என்ற இடத்தில் வசிப்பவர் நித்தியானந்த் திவாரி(75). இவர் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சிறுநீர் கழிக்கும் போதும் அடிவயிற்றில் கடுமையான வயிற்று வலி மட்டுமினறி ஆணுறுப்பிலும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு நாளும் சிறுநீர் கழிப்பது என்பது நித்தியானந்த் திவாரிக்கு நரக வேதனையாக இருந்தது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்துக் கொண்ட போதும் பலனலிக்கவில்லை.

சம்பவத்தன்று, வழக்கம் போல் சிறுநீர் கழித்தபோது கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டிற்குள் சென்ற திவாரி அங்கிருந்த கோடரியை எடுத்து வந்து தன்னுடைய ஆணுறுப்பை வெட்டி எடுத்துவிட்டார்.

இதையடுத்து ரத்தப்போக்கு அதிகமாக வலியால் துடிதுடித்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெட்டிய ஆணுறுப்பை இணைக்க முடியாது என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.