சிறுமியின் சாமர்த்தியம்…. 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி!!

579

இந்தியாவில் திரிபுராவைச் சேர்ந்த 9 வயது சிறுமி தனது சாமர்த்தியத்தால் ரயிலில் பயணித்த 2000 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த இச்சிறுமிக்கு திரிபுரா மாநில சுகாதார துறை அமைச்சர் உணவளித்து தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.மழை காரணமாக அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இதனால் ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டிருந்துள்ளது.

இந்நிலையில் அவ்வழியாக ரயில் வருவதை அவதானித்த சிறுமி தனது சட்டையினை கழட்டி ரயில் வருவதை நிறுத்தியுள்ளார். சிறுமியின் துரித செயலால் மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. சிறுமியின் இச்செயலால் பாராட்டு குவிந்த வண்ணம் இருக்கிறது.