சீனாவில்…………..
சீனாவில் ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை இங்கிலாந்து தூதரக அதிகாரி ஒருவர் காப்பாற்றி சீனாவில் ஹுரோவாகி விட்டார்.
சீனாவின் சோங்கிங்கில் புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து துணைத் தூதர் ஸ்டீபன் எலிசன்( வயது 61) என்பவரே இவவாறு ஹுரோ ஆனவர் ஆவார்.
கடந்த சனிக்கிழமை அருகில் உள்ள நகருக்கு துணைத் தூதர் சென்று கொண்டிருந்தார். அப்போது சுற்றுலா நகரமான ஜாங்ஷானில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணவி தவறி விழுந்துள்ளார்.அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் அவரை காப்பாற்றும் படி அலறினர். ஆனால் எவரும் காப்பாற்ற முன்வரவில்லை.
ஆற்றில் விழுந்த மாணவி நீரோட்டத்திற்கு எதிராக போராடி மயங்கியுள்ளார். இதைப் பார்த்த தூதரக அதிகாரி எலிசன் துணிச்சலுடன் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்துச் சென்று அந்த மாணவியை காப்பாற்றி கரையேறினார்.
இது குறித்த வீடியோ சீனாவின் சமுக வலைத்தளங்களில் பரவி ஸ்டீபன் எலிசன் சீனாவில் ஹீரோவாகி விட்டார்.
61 வயதான டிரயத்தலான் வீரரான எலிசன், ஏற்கனவே மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை மீட்பதற்கு துணிச்சலாக குதித்ததாக சோங்கிங்கில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.