சீரியல் நடிகையின் லவ் சீரிஸ்.. மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட முன்னாள் காதலன் : பகீர் சம்பவம்!!

1245

நாகவர்த்தினி..

குப்பேந்தந்த மனசு’, ‘குண்டம்மா கதை’ போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நாகவர்த்தினி. தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருபவர் சூர்யநாராயணன். நடிகை நாகவர்த்தினிக்கும், சூர்யநாராயணாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலர்களாக மாறிய நிலையில், ஒரே வீட்டில் கணவன் – மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

பஞ்சாரா ஹில்ஸ் அருகே கிருஷ்ணாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் இருவரும் வசித்தனர். இந்நிலையில் ராஜமுந்திரியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவருடன் நாகவர்த்தினிக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். நாகவர்த்தினியின் புதிய காதலன் குறித்த விவரம் சூர்யநாராயணனுக்கு தெரியவரவே, அவர் நாகவர்த்தினியை கண்டித்தார்.

இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட, சூர்யாநாராயணனை வீட்டில் இருந்து வெளியேற்றினார் நாகவர்த்தினி. அடுத்த சில நாட்களில் புதிய காதலன் ஸ்ரீநிவாசை அழைத்து வந்து, தனது வீட்டில் தங்க வைத்தார் நாகவர்த்தினி. இருவரும் கணவன்-மனைவி போல வாழ ஆரம்பித்த விவரம் முன்னாள் காதலன் சூர்யநாராயணனுக்கு தெரியவரவே அவர் கடும் ஆத்திரம் அடைந்தார்.

கடந்த செவ்வாய் கிழமை இரவில் நாகவர்த்தினியும்-ஸ்ரீநிவாஸ்சும் வீட்டில் ஒன்றாக இருந்தபோது, சூர்யநாராயணன் அங்கு சென்று தகராறு செய்தார். நாகவர்த்தினியை மீண்டும் தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்தார். ஆனால் புதிய காதலனுடன் சேர்ந்து சூர்யநாராயணனை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு கூறியும் அவர் போகவில்லை. இதனால் நாகவர்த்தினியும் ஸ்ரீநிவாசும் சேர்ந்து 2-வது மாடியில் இருந்து சூர்யநாராயணனை கீழே தள்ளி விட்டனர்.

கீழே விழுந்த சூர்யநாராயணன் உயிருக்கு போராடும் காட்சிகளை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த காட்சிகள் வைரலாக பரவி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.ஆம்புலன்ஸ் மூலம் ஐதராபாத் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சூர்யநாராயணா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை நாகவர்த்தினி, அவரது புதிய காதலன் ஸ்ரீநிவாசை கைது செய்தனர். இரு காதலர்களை நாகவர்த்தினி சந்திப்பதற்கு முன்னதாகவே அவர் திருமணம் செய்து கணவரை பிரிந்து வந்தவர் என்ற தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. நடிகையின் முக்கோண காதலால் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடி வருவது சீரியல் நடிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.