சூரரைப் போற்று……….
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேற்றைய தினத்தில் அமேசான்பிரைம் வீடியோவில் வெளியாகியது. இப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனங்கள் அளித்து வருகின்றனர்.
மேலும், இப்படத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மைக் கதை காரணமான கேப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட்டையும் பதிவிட்டார்.
அதில், சூரரைப் போற்று அற்புதமான உள்ளது, ஒரு ரியல் ரோலர் கோஸ்டர் படம். நான் கடந்த இரவு தான் படத்தைப் பார்த்தேன். என்னால் சிரிப்பையும் அழுகையும் அடக்கமுடியவில்லை.
குடும்பக் காட்சிகள் என்னை கடந்த கால நினைவுகளுக்கு கொண்டு சென்றது எனத் தெரிவித்தார். பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில், தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது.
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ??@Suriya_offl #SooraraiPottru
— Actor Vadivelu (@VadiveluOffl) November 13, 2020
இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது.