மலப்புரைத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (32) கடற்படை வீரர்களுக்கு இணையாக கொண்டாடப்படும் மீனவர் ஆகியுள்ளார்.
இதற்கு காரணம் கேரள மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜெய்ஷால் தனது முதுகை படிக்கட்டாகி கொள்ள பெண்கள் அதில் ஏறி படகில் அமர்ந்த சம்பவம் பெரும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.
படகில் ஏற முடியாமல் பெண்கள் திணறியபோது, ஜெய்ஷால் குனிந்துகொள்ள அதில் பெண்கள் செருப்புக் காலுடன் ஏறத் தொடங்கினர். அருகிலிருந்த நண்பர், இவர் மனிதர், உங்கள் செருப்புகளை கழற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். ஆனால், ஜெய்ஷால் சத்தம் போட்ட நண்பரை கடிந்துகொண்டார்.
இந்தச் சமயத்தில் இதுவெல்லாம் ஒரு பிரச்னையா என்று சத்தமிட்ட தன் நண்பரை ஜெய்ஷால் அமைதிப்படுத்தியது தெரியவந்துள்ளது.
ஜெய்ஷால் கூறுகையில், வெள்ளத்தில் பல இடங்களில் பாம்புகளைக் கடந்து சென்றோம். எங்கள் குழுவில் உள்ள இருவரை தேள் கடித்தன. ஆனாலும் மீட்புப்பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
