சேதப்படுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் உடல் : தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

1580

தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவின் உடலில் இருக்கும் காயங்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள பிரபல நாயர் மருத்துவமனையில் கடந்த 22 ஆம் திகதி மருத்துவ மாணவி பாயல் தத்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியா முழுக்க அதிர்வலைகளை எழுப்பிய இந்த தற்கொலை வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவி பாயலில், உடற்கூறு ஆய்வறிக்கையின்படி, அவரது உடல் சேதப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அச்சம் தெரிவித்த மாணவி பாயலின் குடும்ப ஆலோசகர் ஒருவர், பாயல் மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், அது தற்கொலை இல்லை கொலை. குற்றவாளிகள் மூவரும் பாயலின் உடலை வேறு எங்கோ எடுத்துச் சென்றுள்ளனர். நீண்ட நேரத்துக்கு பிறகே மீண்டும் கல்லூரிக்குக் கொண்டு வந்துள்ளனர். பாயலின் உடல் சேதப்படுத்தப்பட்டுள்ளதற்கான தடயம் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்த வழக்கைக் கொலை வழக்காகவே விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாணவி பாயல் தத்வி சீனியர் மருத்துவ மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். மட்டுமின்றி பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில், பாயலின் சாதியை குறிப்பிட்டு சீனியர்கள் மன உளைச்சல் கொடுத்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, பாயலைத் துன்புறுத்திய சீனியர் மருத்துவர்கள் ஹேமா அகுஜா, பக்தி மகாரே, அங்கீதா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

பாயலின் தற்கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று முன்தினம், மூவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.