சோபிதாவுடன் நடந்து முடிந்த நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்!!

267

சோபிதாவுடன்..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் ரகசியமாக இருவரும் அவுட்டிங் சென்று வருவதாகவும் சில புகைப்படங்கள் மூலம் செய்திகள் வைரலானது.

இந்நிலையில் நடிகை சோபிதாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் நேற்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அவர்கள் எடுத்த புகைப்படத்தை தற்போது நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதற்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.