ஜுன் 3 தளபதி ரசிகர்கள் ரெடியா? செம்ம விருந்து!

600

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, வெளிநாடுகள் என பல இடங்களில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு விஜய் அவார்ட்ஸ் இந்த வாரம் ஞாயிறு அன்று நடக்கவுள்ளது.இந்த விருது விழாவில் விஜய் கலந்துக்கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதனால், அன்றைய தினம் விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். ஏனெனில் மெர்சல் படத்திற்காக பேவரட் நடிகர் விருது விஜய்க்கு தான் கிசுகிசுக்கப்படுகின்றது.