அமைச்சர் ஜெயக்குமார்

சிந்து என்ற பெண்ணை தனியாக அழைத்து ஜுஸ் கொடுத்து மயக்கி விட்டு தகாதபடி நடந்து கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் சிந்துவும், அவரது அம்மாவும் ஒரு பிரச்சனைக்காக ஜெயக்குமார் அலுவலகத்தில் அவரை சந்தித்துள்ளனர். போலீஸ் அதிகாரி சம்மந்தப்பட்ட ஒரு விசயம்.

இரண்டு, மூன்று நாளில் கூப்பிடுவதாக சொல்லி அனுப்பியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை, அவரது தாயார் ஊரில் இல்லாத நேரத்தில் தொடர்புகொண்டு, போலீஸ் அதிகாரியை வரசொல்லியிருக்கிறேன், நீங்களும் வாங்க என்று சொல்லி அழைத்துள்ளார்.

அந்தப் பெண்ணும் நம்பி சென்றார். சென்றபோது அவரது வீட்டில் யாரும் இல்லை. ஜுஸ் ஒன்றை கொடுத்து குடிக்க சொன்னார்.
அந்த பெண் மயங்கிவிட, இவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். அதன்பிறகு திருமணம் செய்வதாக கூறி பலநாள் உறவில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
அவர் குரல் தான் தன்னுடையது இல்லை என்று சொன்னாரே தவிர, குழந்தை தன்னுடையது இல்லை என்று சொல்லவில்லையே என தெரிவித்துள்ளார்.