டேட்டிங்கிற்கு இளம்பெண்ணை சந்திக்க ஆசையுடன் சென்ற இளைஞன்! திடீரென தப்பியோடியது ஏன்? வியத்தகு காரணம்!!

298

சீனா….

சீனாவில் தனது முதல் டேட்டிங்கிற்கு ஆசையாக எதிர்பார்ப்புடன் சென்ற இளைஞர் உணவகத்தில் அளிக்கப்பட்ட பில்லை பார்த்துவிட்டு தோழியிடம் சொல்லாமல் தப்பித்து ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

23 வயது இளம்பெண் ஒருவர் 29 வயது இளைஞருடன் டேட்டிங் செல்வதற்கு முடிவுசெய்துள்ளார். அப்போது, டேட்டிங் செல்லும்போது அங்கு உள்ள அனைத்து செலவுகளையும் அந்த இளைஞரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிபந்தனையும் வித்தித்துள்ளார் அந்த இளம்பெண்.

அந்த இளைஞரின் தாராள மனதை சோதனை செய்யவே இந்த இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது என்பதை அறியாத இளைஞரும் அனைத்து கட்டணத்தையும் செலுத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டேட்டிங் தினத்தன்று இளைஞர் உணவகம் ஒன்றில் இளம்பெண்ணிற்காக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக தனது உறவினர்கள் 23 பேரையும் அந்த இளம்பெண் டேட்டிங்கிற்கு அழைத்து வந்துள்ளார். டேட்டிங்கிற்கு வந்த அவர்கள் தங்கள் விரும்பம் போல, மதுபானம் மற்றும் உணவுகளை ஆர்டர் செய்து அருந்தியுள்ளனர்.

இறுதியில் உணவக மேலாளர் சாப்பாடு மற்றும் மதுபானங்களுக்கான பில்லை எடுத்து வந்துள்ளார், அப்போது அந்த இளம்பெண் பில்லை அந்த இளைஞரிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.

பில்லை பார்த்த இளைஞருக்கு ஹார்ட் அட்டக்கே வந்துவிட்டது என சொல்லலாம். ஏனென்றால் பில் தொகையானது, 19,800 யுவான் அதாவது லட்சக்கணக்கில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து பில்லை கட்டாமலும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமலும் தப்பியோடியுள்ளார்.

பின்னர் அந்த இளைஞரை தொடர்புகொண்ட இளம்பெண் பாதி பணத்தை இளைஞரும் மீதமுள்ள பணத்தை உறவினர்களும் பகிர்ந்து செலுத்தலாம் என்று கூறி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் நிம்மதியடைந்த இளைஞர் மீண்டும் உணவகத்துக்கு திரும்பியிருக்கிறார்.