தகாத முறையில் தொட்ட ஹீரோ : சீரியல் ஷூட்டிங்கில் கதறி அழுத முன்னணி நடிகை!!

1913

கதறி அழுத முன்னணி நடிகை

டிவி சீரியல்களை சினிமா அளவிற்கு வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக சில சீரியல்களில் ஹீரோ-ஹீரோயின் இடையே நெருக்கம் அதிகாமாக இருக்கும் காட்சிகள் வைப்பதும் சர்வ சாதாரண ஒன்றாகிவிட்டது.

இந்நிலையில் தாயன் என்கிற ஹிந்தி சீரியலில் நடித்துவரும் நடிகை டினா தத்தாவிடம் அந்த சீரியலின் ஹீரோ மோஹித் மல்ஹோத்ரா தகாத முறையில் தொட்டதாக கூறப்படுகிறது. அந்த சம்பவம் நடந்த மறுநாள் நடிகை ஷூட்டிங்கில் அழுது கொண்டே இருந்துள்ளார்.

அது பற்றி டினா தத்தாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சீரியல் ஷூட்டிங் நடத்தும்போது மோசமான பல பிரச்சனைகள் வருகிறது. அது பற்றி தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளேன்.

இனி அப்படி நடந்தால் அனைவர் முன்னிலையில் கூறிவிடுங்கள் என கூறியுள்ளனர்” என தெரிவித்துள்ளார். இதன்மூலம் தகாத முறையில் மோஹித் நடந்ததை உறுதி செய்துள்ளார் அந்த நடிகை.