தந்தையை அழைத்துச்செல்லும் பொலிசாரிடம் கெஞ்சிய சிறுமி… பின்பு நடந்தது என்ன தெரியுமா?

469

பொலிசாரிடம் கெஞ்சிய சிறுமி……………..

தடையை மீறி பட்டாசு கடை வைத்த தந்தையை பொலிசார் அழைத்துச்சென்றதையடுத்து, பொலிஸ் வாகனத்தின் மீது குழந்தை ஒன்று தனது தந்தையை விடுவிக்கக் கோரி கெஞ்சிய காட்சி கண்கலங்க வைத்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை மீறி உத்திரபிரதேச மாநிலம் குர்ஜா என்ற இடத்தில் கடந்த 12ஆம் தேதி நபர் ஒருவர் பட்டாசு கடை திறந்துள்ளார்.

இதனை கேள்விப்பட்ட பொலிசார் அந்த இடத்திற்கு சென்று பட்டாசுக்கடை வைத்தவரை கைது செய்தனர். அவரை கைது செய்ய அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தந்தையை அழைத்துச்சென்ற பொலிசாரின் வாகனம் வரை வந்து மகள் ஒருவர் கெஞ்சியுள்ள சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அந்த நபரை விடுதலை செய்யுமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதனையடுத்து பொலிசார் அந்த நபரை விடுதலை செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் தீபாவளி தினத்தன்று கா வல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்டோர் சிறுமியின் இல்லத்துக்கு சென்று இனிப்புகளை வழங்கி அந்த சிறுமியுடன் தீபாவளியை கொண்டாடினர்.

காவல்துறை மீது சிறுமிக்கு தவறான கண்ணோட்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இனிப்பு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.