தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

593

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் குடிப்பதற்கு பணம் தராததால் தந்தையை குத்திக் கொன்றதாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த, கல்குறிச்சி தேவேந்தர் காலணியை சேர்ந்தவர் பெரியசாமி. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

பெரியசாமி குடிபோதையில் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிமேகலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தந்தை வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றுள்ளார்.

இதன் காரணமாக பெரியசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை பெரியசாமி தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரியசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பெரியசாமியின் மகன் அஜித்திடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், தனது தந்தை அடிக்கடி குடும்பத்தகறாரில் ஈடுபட்டு வந்ததாலும், முந்தைய தினம் இரவு குடிப்பதற்கு தான் பணம் கேட்டபோது தராததாலும் உண்டான ஆத்திரத்தால் கத்தியால் குத்திக் கொன்றதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அஜித்தை கைது செய்த பொலிசார் இந்த கொலை வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.