தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் தனுஷும் ஒருவர். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் தமிழில் ஹன்சிகாவை தனது மாப்பிள்ளை படத்தின் அறிமுகம் செய்தவரும் இவரே. அதனால் ஹன்சிகா தனது 50வது படத்தின் தலைப்பை நாளை வர இருக்கும் தனது பிறந்தநாளில் நடிகர் தனுஷை வைத்து வெளியிட உள்ளாராம்.
இதை தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் இதை ஹன்சிகா ரசிகர்கள் மட்டுமின்றி தனுஷ் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.