தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பம் : 17 வயது சிறுவனுடன் நடந்த திருமணம் : அதிர்ச்சிப் பின்னணி!!

1299

16 வயது சிறுமி கர்ப்பம்

தமிழகத்தில் 16 வயது சிறுமி கர்ப்பமான நிலையில், இதற்கு காரணம் 17 வயதான சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தனது உறவினரான 17 வயது சிறுவனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார்.

தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கும் சிறுமி இது குறித்து தன்னை கர்ப்பமாக்கிய சிறுவனின் தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமிக்கும், சிறுவனுக்கும் கடந்த வாரம் கோவிலில் திருமணம் நடந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமி மற்றும் சிறுவனின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து கர்ப்பமாக உள்ள சிறுமி தற்காலிகரமான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து அவர் பள்ளிக்கூடம் சென்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவார் என கூறப்பட்டுள்ளது. சிறுமியை கர்ப்பமாக்கி நபரும் சிறுவன் என்பதால் அவர் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.