நடிகைகள் தற்கொலை கடந்த சிலவருடமாக தொடர்கதையாகி வருகிறது.சமீபத்தில் வம்சம் சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குழந்தை இல்லாததால் தான் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், சில நடிகைகள் வாய்ப்புக்காக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவார்கள்.
எனவே தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல என அவருடன் இணைந்து நடித்த நடிகை நீலிமா ராணி கூறியுள்ளார்.
மதுரையை சேர்ந்த இவர், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். அருண் என்பவரை தனது ஆசைப்படியே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பிரியங்கா தன்னுடைய கணவரை மாமான்னுதான் கூப்பிடுவா. அவர் மேலே ரொம்ப அன்பு வெச்சிருந்தா. என் மாமா இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என அவ்வப்போது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கூறியுள்ளார்.
மாமான்னு அவ கணவர் பற்றி சொல்லிட்டே இருப்பா. ரெண்டு பேரும் க்யூட் ஜோடி. அவ்வளவு அன்பா இருந்தாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியாமல் குழப்பத்தில் அவளது முகத்தை பார்க்க காத்திருக்கிறோம் என நடிகை சந்தியா கூறியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அழகு நிலையம் ஆரம்பிச்சு, தனது நண்பர்களை எல்லாம் அழைத்திருந்தார். இப்படி தன்னம்பிக்கையோடு இருந்த பெண் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என கேள்வி எழும்பியுள்ளது.
இவரது இறப்பிற்காக காரணம் தெரியாமல் தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது. இதுகுறித்து பொலிசார் இவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.