தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி மனைவி : மாயமான புது மாப்பிள்ளை : காத்திருந்த அதிர்ச்சி!!

529

காத்திருந்த அதிர்ச்சி

கர்ப்பிணி மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் புதுமாப்பிள்ளையை கட்டிப்போட்டு, சி த்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்டீபன் சக்ரவர்த்தி என்பவருக்கும் குரோம்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

மனைவி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த போது, அவருடைய தாய் வீட்டில் நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என நினைத்து அவரை அங்கு விட்டுவிட்டு கணவர் வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் அதன்பிறகு ஒருமுறை கூட தன்னை பார்ப்பதற்கு கணவர் வராததால், அவரது வீட்டிற்கு சென்று மனைவியின் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் சக்கரவர்த்திக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளனர்.

ஆனால் இந்த விடயத்தை மனைவிக்கு இத்தனை நாட்களாக சொல்லாமல் இருந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரை தேடி அலைந்த போது ம து அடிமை மறுவாழ்வு மையத்தில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ம து பழக்கம் அறவே இல்லாத தன்னை எதற்காக இங்கு சேர்த்தார்கள் என்றே தெரியவில்லை என மீட்கப்பட்ட பின்னர் சக்ரவர்த்தி கூறியுள்ளார். மேலும், 20 நாட்களாக கை, கால்களை கட்டிப்போட்டு அ டித்து உ தைத்ததாகவும், சாப்பாடு போடாமல், ஆணி மற்றும் ஒரு மெல்லிய கம்பியை கட்டாயப்படுத்தி விழுங்க வைத்ததாகவும் ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தினார்.

பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்தபோது வயிற்றில் ஆனி, கம்பி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தது, இதனையடுத்து அவருடைய மனைவி, சம்மந்தப்பட்ட மறுவாழ்வு மையம் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதேபோல அங்கு அடைக்கப்பட்டுள்ள 50கும் மேற்பட்டோர், அ டித்து து ன்புறுத்தப்படுவதாகவும் சக்ரவர்த்தி குற்றம் சுமத்தியுள்ளார்.