திடீரென மாயமான விமானம் : தீப்பிடித்து எரிந்து விபத்து!!

355

மாயமான விமானம்

உக்ரைன் நாட்டில் திடீரென ரேடாரில் இருந்து மாயமான விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் கொ ல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சோவியத் வடிவமைத்த நான்கு என்ஜின் கொண்ட உக்ரேனிய அன்டோனோவ் -12 சரக்கு விமானம், மேற்கு விமான நிலையமான எல்விவ் அருகே வந்து கொண்டிருந்த போது, 13.7 கிமீ (8.5 மைல்) தொலைவில் காலை 7:10 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.

ஸ்பெயினிலிருந்து பறந்து வந்து கொண்டிருந்த சமயத்தில் விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அப்போது விமானத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு ஊழியர்கள் கொ ல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.