திருமணத்திற்கு முன் இவருடன் டேட்டிங் செல்ல வேண்டும்: அம்பானி மகளின் ஆசை!!

712

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் நிறுவன அதிபர் மகனை திருமணம் செய்யவுள்ளார்.

நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர், இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

டிசம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது, திருமணத்திற்கு முன்னர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் டேட்டிங் செல்ல இஷா அம்பானி விரும்பியுள்ளாராம்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது இஷாவுக்கு அதிக க்ரஷ் (Crush) இருந்துள்ளது. தொலைக்காட்சியில் அளித்த பேட்டியின் போது, ரன்வீர் சிங்குடன் டேட்டிங் செல்ல விருப்பமிருந்ததாக தெரிவித்துள்ளார்.