திருமணமான ஒரு மாதத்தில் கணவனுக்கு நடக்கவிருந்த பயங்கரம் : திட்டமிட்டபடி நடக்காததால் மனைவிக்கு அரங்கேறிய சோகம்!!

525

தேனி

உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த கௌதம் – புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த மாதம்தான் திருமணம் முடிந்த நிலையில்,

கடந்த 8ஆம் தேதி புவனேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

விளையாட்டில் பல விருதுகள் வாங்கிய புவனேஸ்வரிக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததும் வற்புறுத்தலின் பேரிலேயே,

திருமணம் நடைபெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

கணவருடன் வாழ விரும்பாத புவனேஸ்வரி அவரை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் அதன்படி கடந்த 2ஆம் தேதி கௌதமை தனியே அழைத்துச் சென்று,

கூலிப்படையினரைக் கொண்டு அவர் மீது காரை மோதவிட்டு கொலை செய்ய முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

காரின் பதிவு எண்ணை வைத்து குற்றவாளிகளை நெருங்கி வருவதை அறிந்து பயத்தில் புவனேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்