திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம் : நீடிக்கும் மர்மம்!!

388

விராலிமலை…

விராலிமலை அருகே திருமணமான 3 மாதத்தில் விஷமருந்தி இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை அருகே கல்குடியை சேர்ந்த கோபிநாத் என்பவர் மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்த பொண்ணுவை கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன நாள் முதல் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த போதும்பொண்ணு விஷம் அருந்தி மயங்கியுள்ளார்.

இதனைக் கண்ட கணவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற போதும் பொண்ணுவை திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் தாயாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் விராலிமலை காவல் நிலையத்தில் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தனர்.

இது தொடர்பாக விராலிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதியபட்டுள்ளது. தற்கொலை செய்து கண்ட பெண்ணின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர்,

வருவாய்த் துறையினரும் உரிய நீதி வழங்க வேண்டும் அதன் பின்னரே உடலை பெற்றுக் கொள்வோம் என பெண்ணின் உறவினர்கள் இலுப்பூர்-விராலிமலை சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆனதால் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.