திருமணமான 4 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!

928

புதுப்பெண்

சென்னையில் திருமணம் ஆன 4 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவருக்கும் கவாஸ்கி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

எம்.பி.ஏ பட்டதாரியான கவாஸ்கி ராமநாதபுரத்தில் ரே‌ஷன் கடை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். 4 மாத விடுமுறையில் இருந்த கவாஸ்கி நாளை ரே‌ஷன் கடை கண்காணிப்பாளர் பணியில் மீண்டும் சேருவதற்காக ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

இந்நிலையில் கவாஸ்கி நேற்று வியாசர்பாடி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கவாஸ்கி இறந்த தகவல் அறிந்ததும் அவரது தந்தை கோட்டைசாமி மற்றும் உறவினர்கள் சென்னை வந்தனர்.

அவர், தனது மகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். சாவில் மர்மம் இருக்கிறது என்று பொலிசில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.