இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தமிழகத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் மன்னர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (29). கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகேந்திரன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து அவரது தந்தை பொலிசில் புகார் செய்தார். புகாரில், திருமணமாகாமல் ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டு வந்த நிலையில், மகேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.