தில் இருந்தா என்கிட்ட மோதுங்க… அப்பா விஜயகுமார் செத்துபோகவேண்டும் : வனிதா அதிர்ச்சி பேட்டி!!

1356

வனிதா விஜயகுமார்

எங்க அப்பாவைப் பற்றிப் பல பேருக்குத் தெரியாது. அவர் நிறைய தப்பு பண்ணியிருக்கார் என அவரது மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சொத்துப் பிரச்னை காரணமாக வனிதா மற்றும் அவரது தந்தை விஜயகுமாருக்கு இடையில் சண்டை ஏற்பட்டது.

தனது அம்மாவுக்கு சொந்தமான ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து தன்னை அடித்து துரத்திவிட்டதாக வனிதா கூறியுள்ளார். தனது அம்மாவுக்கு சொந்தமான வீட்டில் வசிப்பதற்கு தனக்கு உரிமை இருக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே எனது குடும்பத்தினருடன் எனக்கு பிரச்சனை. ஆனால் அது வெளி உலகத்துக்கு தெரியவந்தது 2010 ஆம் ஆண்டுதான். எனது அப்பா நிறைய விடயங்களில் பழி சுமத்தியிருக்கிறார். தனது முதல் மனைவியின் பிள்ளைகளை நல்லபடியாக வைத்துக்கொண்டார். அவர்களை சினிமாவில் நடிக்கவைக்கவில்லை.

நல்லபடியாக சம்பாதித்து கொடுத்து தனது முதல் மனைவியின் பிள்ளைகளை நல்லபடியாக வைத்துள்ளார். அருண் விஜய்யை மட்டும் சினிமாவில் நடிக்க வைத்தார்.

ஆனால், இரண்டாவது மனைவியான எனது அம்மா மஞ்சுளாவுக்கு பிறந்த எங்களை சினிமாவில் நடிக்க வைத்து பணம் சம்பாதித்துள்ளார். நான் வீட்டினை அபரித்துவிட்டேன் என என்மீது புகார் கொடுத்தார் என்றால் இது ஒரு கேவலமான குடும்பம். இப்படி ஒரு குடும்பத்தில் நானும் செத்துபோகவேண்டும், எனது அப்பா விஜயகுமாரும் செத்துபோகவேண்டும்.

எங்க அம்மா உண்மையாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் அந்த அளவுக்கு உண்மையாக இல்லை. எனது அம்மாவிடம் பணத்தினை வாங்கி அவரது முதல் மனைவியிடம் கொடுத்து வந்தார்.

எனது அண்ணன் அருண் விஜய், என்னிடம் பணியாற்றியவர்களிடம் மோதுகிறார், தில் இருந்தால் அவர் என்கிட்ட மோதவேண்டும். அருண் ஒரு குற்றவாளி. அவனுக்கு பணம் வேண்டும். எங்க அப்பாவிடம் இருந்து பணத்தினை சுரண்டி வருகிறான். பெரிய சுயநலவாதி அவன்.

மேலும், எனது குடும்பத்து பிரச்சனைகள் பற்றி இரண்டு தங்கைகளான ப்ரீதாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் தெரியும். ஆனால் அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள். எங்க அம்மாவை குடிக்க வைத்து மன அழுத்தத்திற்கு ஆளாக்கியவர் தந்தை விஜயகுமார், இதன் காரணத்தினாலேயே எனது அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என கூறியுள்ளார்.

அம்மா குடிச்சதுக்கு இவங்க தான் காரணம் : மஞ்சுளாவை கொடுமைப்படுத்திய விஜயகுமார் : கண்ணீருடன் வனிதா..

பிரல திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமாருக்கும், அவரின் தந்தையும் நடிகருமான விஜயகுமாருக்கும் மோதல் நிலவி வருகிறது. இதனால் வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்ப பிரச்சனைகள் குறித்து பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் அப்பாவைப் பற்றி பலருக்கு தெரியாது. எங்க குடும்ப பிரச்சனை மிகவும் பெரிது என்று சில தகவல்களை கூறியுள்ளார். அதில், எங்க அப்பாவுக்கு இரண்டு மனைவிகள்.

முதல் மனைவி முத்துக்கண்ணு. இவருக்கும் மொத்தம் மூன்று குழந்தைகள். அருண் விஜய் அதில் மூன்றாவது பையன். எங்க அப்பாவோட இரண்டாவது மனைவிதான், எங்க அம்மா மஞ்சுளா. அப்பாவும், அம்மாவும் காதலிச்சு திருமணம் செய்துகொண்டார்கள். இந்த திருமணம் முத்துக்கண்ணு தலைமையில் தான் நடந்தது. இதற்கு காரணம் முத்துக்கண்ணுக்கு எங்க அம்மாவோட நகை, பணம், புகழ் எல்லாம் தேவைப்பட்டது.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் கழித்து நான் பிறந்தேன். என் மேல எல்லோரும் அவ்வளவு பாசமா இருந்தாங்க, அப்பாவுக்கு திடீரென்று பட வாய்ப்புகள் குறைந்ததால், பணப் பிரச்சனை வந்தது.

இதனால் அம்மா அமெரிக்கா சென்று தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்தாங்க, முதலில் அம்மா போனாங்க, பின்னர் நான், முத்துகண்ணு எல்லோரும் அமெரிக்கா சென்றோம். பணப் பிரச்சனையும் தீர்ந்தது. அந்த நேரத்தில் முத்துக்கண்ணுவின் முதல் பொண்ணுக்கு, நடிகை விஜயகுமாரியின் பையன் ரவிக்குமாரைக் கல்யாணம் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

விஜயகுமாரியும் அவங்க பையனுடன் வந்து எங்க வீட்டில் தங்கினார். அந்த சமயத்துல எங்க அம்மாவுக்கும், முத்துக்கண்ணுக்கும் இடையில் சண்டை மூட்டிவிட்டு பிரிச்சு விட்டுட்டாங்க. அப்பா உடனே முத்துகு்க்கண்ண கூப்பிட்டு சென்னை வந்துவிட்டார். அப்பாகிட்ட எங்க அம்மா எவ்வளவோ பேச முயற்சித்தும் முடியல், அவங்க குடும்பத்துகாரங்க விடவில்லை,

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அப்பா ஒரு வருடம் கழித்து அமெரிக்கா வந்து எங்களை பார்த்தார். நாங்க எல்லோரும் அப்பாகூட இந்தியாவுக்கு வந்துட்டோம். அதன் பின் அப்பாவுக்கு பட வாய்ப்பு வந்தது, வீடு கட்டினார், சொத்து சேர்த்தார். அப்பாவுக்கு எப்போவுமே முதல் மனைவி முத்துக்கண்ணு குடும்பம்தான் பெருசா தெரிந்தது. ஏதாவது சொத்துகள் வாங்குனா, முதலில் அம்மா பெயரில் வாங்குவார்.

பிறகு, வரி பிரச்னைனு சொல்லி அவருடைய பெயருக்கு சொத்துகளை மாற்றி, அதை அப்படியே முதல் மனைவி முத்துக்கண்ணு குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்திடுவார். அருண் விஜய் பெயரில் நிறைய சொத்துகளை இப்படி எழுதிக் கொடுத்திருக்கார். அவனுடைய படங்கள் ஒடாமப் போக, கடைசியில் சொத்துகளையெல்லாம் அடகு வைக்கிற அல்லது விற்கிற நிலைமைக்குக் கொண்டு வந்திடுவான். முதல்ல மாமானர் சொத்தை விற்றான். இப்போ எங்க அப்பா சொத்தை விற்கிறான்.

எங்க அம்மா இன்னும் 20 வருடம் உயிரோடு இருந்திருப்பாங்க, அப்பா செஞ்சா கொடுமையால் தான் அவங்க உடல்நிலை சரியில்லாமல் போய் இறந்துட்டாங்க, அம்மாவுக்கு குடிப்பழக்கம் கத்து கொடுத்ததே அப்பா தான், நான் எங்க அம்மா வாழ்ந்த வீட்டில், என் பொண்ணுகூட நான் வசிக்கிறேன். இது எங்க அம்மா சொத்து. இந்த வீட்டை விட்டு நான் வெளியே போகமாட்டேன் என்று கூறியுள்ளார்.