துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டையர்கள் 13 நாட்களுக்கு பின் ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு!!

1029

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டையர்கள்

மத்தியரே பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரட்டை சிறுவர்கள், 13 நாட்களுக்கு பின்னர் ஆற்றங்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரியன்ச் மற்றும் ஷிரியன் ராவத் என்கிற இரட்டை சகோதரர்கள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் சத்குரு பொது பள்ளியில் பயின்று வருகின்றனர்.

கடந்த 12-ம் திகதி இருவரும் தங்களுடைய பள்ளி வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போது, மதியம் 12 மணியளவில் முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்பொழுது குற்றவாளிகள் சார்பில் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டப்பட்டது.

ஆனால் பொலிஸார், குற்றவாளிகள் சம்மந்தமாக தகவல் தெரிவித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், காணமல் போன இரண்டு சிறுவர்களும் உத்திப்பிரதேசத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 6 பொறியியல் பட்டதாரிகளை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மட்டும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அந்த இரண்டு சிறுவர்களுக்கும் பயிற்சி வகுப்பு எடுத்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.