துரோகம் செய்த காதலன் : திருமணத்தன்று மணமகள் கொடுத்த வித்தியாசமான தண்டனை!!

929

வித்தியாசமான தண்டனை

அவுஸ்திரேலிய இளம்பெண் ஒருவர் தனக்கு துரோகம் செய்த காதலனுக்கு வித்தியாசமான ஒரு தண்டனையை அளித்துள்ளார். நீண்ட நாள் காதலனை திருமணம் செய்யும் ஆசையிலிருந்த கேசி திருமணத்திற்கு முந்தைய தினத்தை தனது தோழிகளுடன் செலவிட்டுக் கொண்டிருக்கும்போது, அவரது மொபைலுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தன.

மொபைலை எடுத்துப் பார்த்த கேசியின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. அதில் ஒரு ஆண் தனது காதலிக்கு அனுப்பிய மிகவும் அந்தரங்கமான செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்கள் இருந்தன. அவற்றை அனுப்பியவர் கேசி மறுநாள் திருமணம் செய்ய இருக்கும் அவரது காதலர் அலெக்ஸ்.

அலெக்ஸ் வேறு யாரோ ஒரு பெண்ணுடன் நீண்ட நாள் தொடர்பிலிருந்தது அந்த குறுஞ்செய்திகளிலிருந்தும் அந்த பெண் அனுப்பிய புகைப்படங்களிலிருந்தும் தெரியவந்தது.

இறுதியில், நானாக இருந்தால் அவனை திருமணம் செய்யமாட்டேன், நீ? என்ற அந்த பெண்ணின் கேள்வியுடன் குறுஞ்செய்திகள் முடிவடைந்திருந்தன. அப்படியே கேசி உட்கார்ந்து விட, அவரது தோழிகள் இப்போதே அந்த மணமகனை ஒரு வழி செய்து விடலாம் என துடித்தார்கள்.

அவர்களை அமைதியாக இருக்கச் சொன்ன கேசி வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். மறுநாள் மணமகளின் ஆடைகளை உடுத்திக் கொண்ட கேசி, மணமேடைக்கு வந்தார்.

அனைவரும் ஆவலுடன் திருமணத்தைக் காண காத்திருக்க, தனது முகத்திரையை விலக்கிய கேசி, இந்த திருமணம் நிறுத்தப்படுகிறது என்று அறிவித்தார். விருந்தினர்கள் கலவரமடைய, தனக்கு வந்த குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தார் கேசி.

அந்த பெண்ணின் உடலை வர்ணித்தது முதல், எனது காதலி உன் அளவில் பாதி கூட என்னை படுக்கையில் திருப்தி படுத்த முடியுமா என்று தெரியவில்லை என்பது வரை அலெக்ஸ் இன்னொரு பெண்ணுக்கு அனுப்பியிருந்த அந்தரங்க செய்திகள் முதல் ஆபாச செய்திகள் வரை நிறுத்தி நிதானமாக வாசித்தார் கேசி.

தனது உறவினர்கள் முன் அவமானத்துடன் தலை குனிந்தவாறே அலெக்ஸ் அங்கிருந்து நகர, மக்கள் கூட்டம் கலைய ஆரம்பித்தது.
யாரும் போக வேண்டாம் என்ற கேசி, நாம் நேர்மையையும், உண்மையான அன்பை கண்டுபிடிப்பதையும் கொண்டாடுவோம் என்று கூற, அங்கு ஒரு பார்ட்டி தொடங்கியது.