இந்தியாவின் ராஜஸ்தானில் இளம் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னி ஷர்மா என்ற பெண் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் பின்னியின் சடலத்தை கைப்பற்றியதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.
அதில், தனது கணவர் குர்பிரித் மற்றும் மாமியார் வாலியா தன்னை எவ்வாறு துன்புறுத்தினார்கள் என எழுதியுள்ளார். மேலும், தன் உறவுகள் எல்லாரும் போலியாக இருந்து ஏமாற்றினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
பின்னியின் பெற்றோர் தனது மகளை அவரின் குடும்பத்தார் அதிகளவு கொடுமைப்படுத்தியதாக பொலிசில் புகார் அளித்தார்.
இதையெல்லாம் வைத்து பொலிசார் குர்பிரித் மற்றும் வாலியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.