தூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோய் : ஆறு மாத குழந்தையுடன் தத்தளிக்கும் தாய்!!

999

குழந்தையுடன் தத்தளிக்கும் தாய்

இந்திய தலைநகர் டெல்லியில் தூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோயுடன் ஆறு மாத குழந்தை ஒன்று அவஸ்தைப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியின் கர்வால் நகரில் குடியிருக்கும் தம்பதிகளின் யாதாத் தத் என்ற ஆறு மாத குழந்தைக்கே இந்த அபூர்வ நோய் தாக்கியுள்ளது. உலகமெங்கும் இதுவரை சுமார் 1,000 பேருக்கு இந்த அபூர்வ நோய் பாதிப்பு உள்ளதாக கூறும் மருத்துவர்கள் hypoventilation syndrome என இதை குறிப்பிடுகின்றனர்.

இந்த அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கத்திற்கு மாறாக மூச்சு வாங்குவதாகவும், இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் தூக்கத்திலேயே உயிர் பிரியும் நிலை ஏற்படலாம். தங்களது பிஞ்சு குழந்தையின் இந்த நோய் தாக்கத்தால் தற்போது பெற்றோர்கள் இருவரும் தூங்காமல் கண்விழித்து காவல் இருந்து வருகின்றனர்.

தங்களது மகன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது தெரிந்தால் உடனே தட்டி எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவ சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.

இதனிடையே தமது 20 ஆண்டு கால மருத்துவ வாழ்க்கையில் இதுபோன்ற நோய் பாதிப்புடன் இதுவரை இருவரை மட்டுமே சந்தித்துள்ளதாக மருத்துவர் கங்காராம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையின் உடலில் diaphragm pacing system என்ற கருவியை பொருத்த வேண்டும் எனவும் அவர் குறித்த பெற்றோருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது ஆயுள் காலம் முழுவதும் உடலில் பொருத்தியிருக்க வேண்டும். மட்டுமின்றி இந்த சிகிச்சையானது இதுவரை இந்தியாவில் பயன்படுத்தபட்டதில்லை. அமெரிக்காவில் சென்று சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர் கங்காராம் பரிந்துரை செய்துள்ளார்.