தென்னிந்திய பிரபல நடிகர் இலங்கையில்!!

748

தமிழகத்திலிருந்து நடிகர் சுபு (பஞ்சு சுபு) சுற்றுலாப் பயணமாக நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார்.தனது குடும்ப சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு வந்துள்ள அவர் நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டார்.

சீத்தா எலிய அம்மன் ஆலயம், றம்பொட ஆஞ்சிநேயர் ஆலயம் உட்பட கண்டி மற்றும் பல பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டார்.

கொட்டகலை – பத்தனை கிறேக்கிலி தோட்டத்துக்கு சென்ற அவர் அங்கு தேயிலைத் தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.