அயர்லாந்துக்கு தேனிலவு சென்ற இளைஞருக்கு மூவருடன் சண்டை ஏற்பட்டதால் அவரின் கால் உடைந்ததோடு நீதிமன்ற வழக்கையும் எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் நிகோலஸ் வார்னர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் மனைவியுடன் அயர்லாந்துக்கு தேனிலவு சென்றுள்ளார்.
அங்கு வார்னருக்கு 30 வயதுடைய இரண்டு இளைஞர்கள் மற்றும் 60 வயதுடைய நபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மூவரையும் வார்னர் தாக்கியதால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சண்டையில் வார்னரின் காலும் உடைந்தது.
இதையடுத்து மூவரை கத்தியால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாக வார்னர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணையிலும் தனது தவறை வார்னர் ஒப்பு கொண்ட நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வரும் செப்டம்பர் 6-ஆம் திகதி வார்னர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக உள்ள நிலையில் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத வகையில் அவரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.