தோழிகளுடன் சுற்றுலா சென்ற தூரிகை… வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!

1511

சென்னை……

கவிஞர் கபிலனின் மகள் தூரிகை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடிகரும், பாடலாசிரியருமான கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தூரிகையின் இந்த திடீர் முடிவு அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.

அவரது மரணம் தொடர்பில் பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூரிகையின் பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளனர் என்றும், அதன் காரணமாகவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், திருமணம் வேண்டாம் என துணிச்சலாக கூறும் தைரியமான பெண் தூரிகை, அவர் எப்படி இந்த காரணத்திற்காக தவறான முடிவை எடுத்திருப்பார் என பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திரையுலகில் பலருடன் நல்ல நட்பில் இருந்து வந்த தூரிகை, கடந்த மாதம் தனது தோழிகளுடன் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

பல பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் தூரிகை பகிர்ந்திருக்கிறார்.

எனவே அவரது தற்கொலைக்கான உண்மையான காரணத்தை பொலிசார் கண்டறிய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.