தோழியிடம் யோசனை கேட்டு தற்கொலை செய்த மாணவி : உருக்கமான கடிதம் சிக்கியது!!

1111

இந்தியாவில் பள்ளி மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த நிலையில் அது குறித்து தோழியிடம் முன்னரே அவர் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.

மும்பையை சேர்ந்த ஹர்சிகா மாயவன்சி (14) என்ற மாணவி கடந்த வாரம் எட்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஹர்சிகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் பொலிசாருக்கு பல விடயங்கள் தெரியவந்துள்ளது.

அதன்படி அவர் பையில் இருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், எல்லாம் முடிந்துவிட்டது, தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்தது.

பொலிஸ் விசாரணையில், எப்படி தற்கொலை செய்வது என ஹர்சிகா தனது தோழியிடம் யோசனை கேட்டுள்ளதும், அது குறித்து இணையத்தில் தேடியதும் தெரியவந்துள்ளது.

பயம் காரணமாக இதை ஹர்சிகாவின் தோழி யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் தற்போது வெளியில் சொல்லியுள்ளார்.

அவர் குறித்த அடையாளங்களை வெளியிடாத பொலிசார் தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.