இந்தியாவில் தோழியின் காதலனை வைத்து மாமியாரை கொலை செய்த மருமகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் ஜோதி. திருமணமான இவர் தனது கணவர் மற்றும் மாமியாரான சுர்ஜித் கவுருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஜோதிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து சுர்ஜித் அவரை கண்டித்துள்ளார்.இந்நிலையில் மாமியார் மீது கோபத்தில் இருந்த ஜோதிக்கு அவரின் நகைகள் மற்றும் பணம் மீது ஆசை ஏற்பட்ட நிலையி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி தனது தோழி வர்காவை அனுகிய ஜோதி வர்காவின் காதலரான ராக்வீரை வைத்து மாமியாரை கொல்ல முடிவெடுத்தார்.இதையடுத்து ராக்வீருக்கு 50000 பணம் கூலியாக பேசப்பட்டது, அதன் பின்னர் ஜோதி உதவியுடன் சுர்ஜித்தை ராக்வீர் கொலை செய்துள்ளார்.
பின்னர் சடலத்தை அங்குள்ள முட்புதரில் போட்டுள்ளனர்.சுர்ஜித் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் ஜோதியை பொலிசார் விசாரித்த நிலையில் மாமியாரை கொன்றதை ஒப்பு கொண்டார்.இதையடுத்து ஜோதி, ராக்வீர் மற்றும் வர்காவை பொலிசார் கைது செய்துள்ளனர்.