நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழில் செய்ய வைத்தது எப்படி? உண்மையை கூறிய ஆந்திர தம்பதி!!

871

வாய்ப்பிற்காக ஏங்கி நிற்கும் இளம் நடிகைகளையே ஆந்திர தம்பதி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சிக்காகோவில் வசித்து வந்த ஆந்திரா தம்பதி கிஷான் மோடுகுமூடி மற்றும் சந்திரா ஆகியோர் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அவர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையின் போது அவர்கள் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதில், முதலில் வெளிநாட்டிற்கு வரும் தென்னிந்திய நடிகைகளை வலை வீசியுள்ள இந்த தம்பதி, அவர்களிடம் நேரடியாக பேச முடியாது என்பதால், அங்கிருக்கும் சிறிய நடிகைகளிடம் முதலில் பேசி, அவர்களை தங்கள் நிறுவனங்களில் நடிக்க வைக்கின்றனர்.

அதன் பின் அவர்கள் மனதை மாற்றி பாலியல் தொழிலில் இறங்க வைத்துள்ளனர். இதற்காக இவர்கள் தாங்கள் ஒரு உண்மையான சினிமா நிறுவனம் போலவே செயல்பட்டுள்ளனர்.

இதை நம்பவைக்க வேண்டும் என்பதற்காக தெலுங்கில் சினிமா நிறுவனம் என்று பெயரை பதிவு செய்து, அதனுடைய அமெரிக்க கிளை தான் இது என்று அமெரிக்காவில் பதிவு செய்த, அந்த லெட்டர் பேட்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர்.

இப்படி பல வருடங்களாக இவர்கள் யாருக்கும் தெரியாமல் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர்.இந்த வலையில் பெரும்பாலும் பெரிய நடிகைகள் யாரும் விழவில்லை எனவும், வாய்ப்பிற்கு ஏங்கி நிற்கும் சிறிய நடிகைகளே இவர்களிடம் சிக்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இது போன்ற மோசமான வேலையை செய்து வந்திருக்கும் இவர்களிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.