நடிகை பானுப்பிரியா
நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்யும் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் கூறப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த பிரபாவதி என்ற பெண், சந்தியா ( 14) என்கிற தனது மகள் நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்வதாகவும், அவரும் அவரது சகோதரரும் மகளை அடிமைபோல் நடத்துவதாகவும் பொலிசில் புகார் செய்திருந்தார். மேலும் சந்தியாவுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டார்.
இச்செய்தி ஊடகங்களில் வந்து பரபரப்பான நிலையில், பாதிக்கப்பட்ட சந்தியாவை நடிகை பானுப்ரியா புகார் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்ததாகவும் அவர்களிடம் சந்தியா, பானுப்ரியாவோ அவரது சகோதரரோ தன்னைத் துன்புறுத்தவோ, வீட்டுக்காவலில் வைக்கவோ இல்லை என்று வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிகிறது.
இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்வதற்காக சிறுமியுடன் நடிகை பானுப்ரியா செய்தியாளர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.