நடிகை ரேகாவின் 50 ஆண்டு இளமை ரகசியம் என்ன தெரியுமா?

666

ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகையான ரேகா 50 ஆண்டுகளாக அதே அழகு, அதே உடல் அமைப்புடன் இருப்பது எப்படி என்பது குறித்து காண்போம்.

மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் புஷ்பவல்லி தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் ரேகா. தனது 13வது வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், பல ஆண்டுகளாக கதாநாயகியாகவே தொடர்ந்தார்.

இவரது நடிப்பை விட, திரையுலகில் இவர் அறிமுகமானதில் இருந்து இன்று வரை அதே அழகு, அதே உடல் அமைப்புடன் இருப்பது தான் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் விடயமாகும்.இந்நிலையில், நடிகை ரேகா பின்பற்றி வரும் அழகு மற்றும் ஆரோக்கிய ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்.

தண்ணீர்:நடிகை ரேகா, தினமும் சரியான அளவு தண்ணீரை குடிக்கிறார். அதாவது ஒரு நாளைக்கு 10-12 தம்ளர்கள் தண்ணீரை குடிக்கிறார். இதன்மூலம் உடலில் நீர்வறட்சி ஏற்படாது மற்றும் சருமம் நச்சுத்தன்மை அதிகரிக்காமலும் காக்க முடிகிறது.

இரவு உறக்கம்:படுக்கைக்கு சீக்கிரமாக சென்று உறங்குதல் மற்றும் அதிகாலையில் எழுவது என சீரான தூக்கத்தனை பெற வேண்டும் என்பது ரேகாவின் ஆரோக்கியத்தின் மற்றொரு ரகசியமாகும். இதன்மூலம் அவர் நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்.

உணவுப்பழக்கம்:உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கும் வகையில், போதுமான உணவுகளை மட்டுமே ரேகா உட்கொள்கிறார். அத்துடன், ஆரோக்கியமற்ற உணவுகள், பானங்கள், வறுத்த மற்றும் அதிகமாக எண்ணெய் அல்லது அதிகளவில் சமைக்கப்பட்ட உணவுகளை ரேகா அறவே தவிர்த்து விடுவார்.

தனது உணவில் காய்கறி, தயிர், சப்பாத்தி, சாலட் போன்றவற்றை ரேகா பிரதானமாக வைத்திருக்கிறார்.ரேகா தனது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க தயிர், ஜூஸ், தண்ணீர் போன்ற நீராகாரங்களை அதிகம் சேர்த்துக்கொள்கிறார்.தனது இரவு உணவை 7.30 மணிக்கே உட்கொண்டு விடுவார்.

இயற்கை மருத்துவம்:ரேகா பண்டைய கால அழகு குறிப்புகளில் அதிக கவனம் கொண்டிருப்பவர். எனவே தான் அவர் ஆயுர்வேதம் மற்றும் அரோமாதெரபி போன்றவற்றை தனது வீட்டிலேயே செய்து கொள்கிறார்.

வாழ்க்கைமுறை:ரேகா எப்போதும் தன்னை மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் இன்றியும் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒழுக்கமான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார்.

கூந்தல் பராமரிப்பு:ரேகாவிற்கு தற்போது 63 வயதானாலும் அவரது கூந்தல் நீளமாகாவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு காரணம் நெல்லிக்காய், சீகக்காய், வெந்தையம் மற்றும் தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவது தான்.

மேலும், இயற்கையான முறையில் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை கொண்டு வாரத்திற்கு ஒருமுறை கூந்தலை அலசி பராமரித்துவிடுவார். அத்துடன், ரேகாவுக்கு கூந்தல் ஈரமாக இருக்கும்போது தலையை சீவும் பழக்கம் கிடையாது.

உடற்பயிற்சி:தினமும் காலையில் எழுந்ததும் 10-15 நிமிடங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கொண்டவர் ரேகா. மேலும், இவர் தினமும் யோகா, தியானம் ஆகியவற்றையும் செய்து வருகிறார்.

நடனம்:நடிகை ரேகா ஒரு சிறந்த நடனக் கலைஞராவார். தற்போது வரை அவர் நடனத்தை தொடர்ந்து வருகிறார். அத்துடன் தனது வீட்டு வேலைகள், தோட்ட பராமரிப்பு ஆகியவற்றை செய்து உடலை பேணிக்காக்கிறார்.

சைவம்:ரேகா ஒரு சைவ பிரியர் ஆவார். இந்திய உணவு மசாலாக்களை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்கிறார். தனது அன்றாட உணவில் மாதுளை, நட்ஸ், பாதாம், வால்நட், காய்கறி மற்றும் இதர பழங்களை சரியான அளவு சேர்த்துக் கொள்கிறார்.

இந்த பழக்க வழக்கங்கள் கடினமாக தெரிந்தாலும், தினமும் செய்து வந்தால் பழகிவிடும். இதுவே நடிகை ரேகாவின் இளமை மற்றும் ஆரோக்கிய ரகசியங்கள் ஆகும்.