சமூக வலைதளம் எந்த அளவிற்கு நல்லதோ அதே சமயம் மிகவும் ஆபத்தானது. இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் பிரபலங்களுடன் இணைப்பில் இருக்க உதவுவது பேஸ்புக், டுவிட்டர் விஷயங்கள் தான்.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரபலங்கள் தங்களுக்கு என அக்கவுண்ட் வைத்துள்ளனர். தற்போது என்னவென்றால் நடிகை வித்யூலேகாவின் பேஸ்புக் பக்கத்தை கைப்பற்றிய விஷமிகள் மற்றொரு நாயகியின் சமூக வலைதளமாக மாற்றியுள்ளனர்.
அதோடு நேற்று முழுவதும் அந்த பக்கத்தில் நிறைய வீடியோக்கள், புகைப்படம் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவலை வித்யூலேகா தனது டுவிட்டரில் அறிவித்து சைபர் கிரைமில் இதுபற்றி புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.