நான் உயிரோடு இருந்தால் என்னைச் சந்திக்க அவன் நிச்சயம் வருவான் : தமிழ் நடிகை உருக்கம்!!

1101

தமிழ் நடிகை உருக்கம்

சுதந்திரதினத்தன்று மழைநீர் வடிகால்வாயில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட குழந்தை குறித்து நடிகை கீதா பேசியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமான பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை துணை நடிகை கீதா மீட்டெடுத்ததோடு, சுதந்திரம் என்று பெயரிட்டார்.

சுதந்திரத்துக்கு முதலுதவி சிகிச்சையளிக்க பின்னர் அந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக கீதா கூறினார். ஆனால் தற்போது அதிலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார். இது குறித்து கீதா கூறுகையில், குழந்தை சுதந்திரம் நலமாக உள்ளான்.

கடந்த மூன்று தினங்களாக சளி தொல்லையால் சிரமப்பட்ட நிலையில் சிகிச்சைக்குப் பிறகு நன்றாக இருக்கிறான். குழந்தையை தத்தெடுக்க சில விதிகள் இருப்பதாகச் சொன்னார்கள். அதையெல்லாம் பின்பற்றுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு சில சிக்கல்கள் உள்ளன.

எனவே, சுதந்திரத்தை நான் தத்தெடுக்க முடியாத சூழலில் இருக்கிறேன். அவனுக்கு உடல்நலம் சரியில்லை என்ற தகவல் கிடைத்தால் என்னையறியாமல் ஆஸ்பத்திரிக்குச் சென்று கவனித்துவந்தேன்.

குழந்தைகள் இல்லாதவர்களிடம் சுதந்திரம் கிடைத்தால் இன்னும் அவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இதனால்தான் அவனைத் தத்தெடுக்கவில்லை. மேலும், என்னிடம் அவன் வளர்வதைவிட வேறு எங்கு வளர்ந்தாலும் அவன் நலமாகவும் சிறப்பாகவும் இருக்கவேண்டும். குறிப்பாக அவனுக்கு விவரம் தெரியும் போது நான் உயிரோடு இருந்தால் என்னைச் சந்திக்க நிச்சயம் அவன் வருவான் என உருக்கமாக கூறியுள்ளார்.