நித்தியானந்தா சில வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகையுடன் தனிமையில் இருக்கும் காட்சி ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை எழுப்பியது.
பின் அந்த காணொளியில் நான் இல்லை என்று அந்த நடிகை பிரஸ்மீட் வைத்து சொல்லியிருந்தார்.வாலண்டியராக மட்டுமே இருந்த அந்த நடிகை இந்த சம்பவத்திற்கு பின் முழு நேர நித்தியனந்தாவின் பக்தையாக மாறிவிட்டார்.இந்த காணொளியின் பின்னர் நித்தியானந்தவின் பிட்தி ஆசிரமம் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கு கண்காணிப்புகள் பலவும் தீவிரமானது.
இந்நிலையில் இன்று பாலியல் வழக்கில் தன்னைவிடுவிக்க கோரி நித்தியானந்த கொடுத்த மனு விசாரணைக்கு வந்தது அந்த காணொளி உண்மை இல்லை என்றும் அது வேறு ஒருவரை நடிக்க வைத்து மார்பிங்க் செய்துள்ளனர் என்றும் கூறி தன்னை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கோரினார்.
இதையடுத்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை விரைவாக விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் நித்தியானந்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காணொளியில் உள்ளது உண்மை என்று தீர்ப்பு கொடுக்கும் பட்சத்தில் நிலைமை தலைகீழாக மாறும் என்பது மட்டும் உண்மை.