நித்தியானந்தாவின் முக்கிய சீடர்

புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் ச டலம் நி ர்வாண நிலையில் மீ ட்கப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் அடுத்த ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவர் நித்தியானந்தாவுக்கு புதுச்சேரியில் உள்ள முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார்.

ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவரது பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு போன் செய்துள்ளார்.

அப்போது நித்தியானந்தா பெயரில் இவர் நடத்திவரும் பேக்கரியில் இருந்த வஜ்ரவேலு தனது காரை எடுத்துக்கொண்டு வசந்தா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் வஜ்ரவேலின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயந்துபோன அவர் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனிடையே குருவிநத்தம் சமூக நலக்கூடம் எதிரில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வஜ்ரவேலின் கார் நின்றுகொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து, பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், காரில் நி ர்வாண கோலத்தில் ச டலமாக கிடந்த வஜ்ரவேலை மீ ட்டுள்ளனர். அவரது தலையில் பிளாஸ்டிக் கவர் மூ டப்பட்டு இருந்தது.

இதனால் முகத்தை மூடி, மூச்சு தி ணற வை த்து கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு காரில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

பின்னர், வஜ்ரவேலின் ச டலத்தை மீட்டு உடர்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.