நீ சாதி குறைந்தவன்… எங்கள் காலடியில் தான் நீ கிடக்க வேண்டும் : பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த துயரம்!!

1081

நேர்ந்த துயரம்

கர்நாடக மாநிலத்தில் பொலிஸ் ஒருவர் சாதி பெயரை சொல்லி இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஹானே கவுடா, 28 வயதான இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தினுள் வெளியாகியுள்ளது.

ராமசகரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் வேறு சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்ததாக தெரிகிறது. இதனால் இரு சமூகத்திற்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு இளைஞர்களை கைது செய்த ஹானே கவுடா, இரவு நேரம் மது அருந்தி விட்டு இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

தன்னுடைய கையில் வைத்திருந்த பிரம்பால் அடித்துக்கொண்டே, உனக்கு எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண் கேக்குதா? நீ இருக்க வேண்டிய இடம் எது தெரியுமா? எங்கள் காலடியில் தான் கிடக்க வேண்டும் எனக்கூறி தாக்கிக்கொண்டே இருக்கிறார்.

இதனை அங்கிருந்த பொலிஸார் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது பேரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளைஞர்கள் இரண்டு பெரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதும், தினமும் இரவு நேரம் அவர்களை தாக்கி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எஸ்.பி. லோகேஷ் தெரிவித்துள்ளார்.