நீ வெர்ஜின்தானா? அப்பாவும், மகனும் பெண்களை வலையில் விழவைப்பார்கள் : பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்!!

789

பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவர் தனது கபடி பயிற்சியாளரின் மகன் கொடுக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளித்த காரணத்தால் மிரட்டப்பட்டுள்ளார்.

குறித்த கல்லூரி மாணவி விஸ்வநாதன் என்பவரிடம் கபடி பயின்று வருகிறார். இவரது மகன் சஜ்ஜீவ் குமார், மாணவியை தனியாக வீட்டுக்கு அழைத்ததோடு மட்டுமல்லாமல் மாணவியின் கன்னித்தன்மை குறித்து ஆபாசமாக பேசியுள்ளார்.

அவ்வாறு, வீட்டுக்கு தனியாக வரவில்லையென்றால் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உனது பெயரையும் சேர்த்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் மாணவி புகாரளித்த நிலையில், சஞ்ஜீவ்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மாணவியின் வீட்டுக்குச் சென்று சஞ்சிவ் குமாரின் தாய், புகாரை திரும்ப பெறவேண்டும் என்றும் இல்லையென்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து, மாநகர காவல் ஆணையரிடம் மாணவி மீண்டும் புகார் அளித்துள்ளார். தமது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் மாணவி நடந்தவை குறித்து கூறியதாவது, கபடி விளையாட்டு எனக்கு உயிர். அப்பா இறந்துவிட்டதால், அம்மாவின் கடின உழைப்பில் நானும் எனது தங்கையும் படிக்கிறோம்.

நான் மூன்று முறை ஸ்டேட் பிளேயராக தமிழகத்துக்காக விளையாடியிருக்கேன். கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி கபடி பயிற்சியாளர் விஸ்வநாதனிடம் பயிற்சி பெறும்போதுதான் அவரது கேவலமான முகம் தெரியவந்தது.

மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொள்வார். எனது வீட்டுக்கு வந்து என்னை குளிப்பாட்டி விடுறீயா என்றெல்லாம் கேட்பார். அவருக்கு ஒத்துழைக்காத மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கமாட்டார். அதுமட்டுமல்ல, கல்லூரி நிர்வாகத்திடம் ஏதாவது காரணம் சொல்லி அந்த மாணவிகளைத் தேர்வு எழுத விடாமல் செய்துவிடுவார்.

இவர் மட்டுமல்ல இவரது மகன் சஞ்சீவ்குமாரும் மோசமான ஆள். அவரும் பயிற்சி பெறவரும் மாணவிகளிடம் மிகவும் ஆபாசமாக நடந்துகொள்வார். ஒருநாள் திடீரென்று, நீ வெர்ஜின்தானா என்று டெஸ்ட் செய்ய வேண்டும் வீட்டுக்கு வரும்போது காண்டம் வாங்கி வா’ என்று சொன்னான். இதனால் கோபமடைந்த நான் அவனை மோசமாக திட்டிவிட்டேன்.

இந்நிலையில் பயிற்சிக்கு சென்றிருந்தபோது எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தான். இதனை என் அம்மாவின் உதவியோடு காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன்.

இதனால் சஞ்சீவ்குமார் கைது செய்யப்பட்டதும், ஆத்திரம் அடைந்து, சஞ்சீவ்குமாரின் அம்மா சுசீலா, மனைவி மீனா, தங்கை ரம்யா ஆகியோர் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னை சரமாரியாக அடித்துவிட்டனர் இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.