பட்டப்பகலில் புது மாப்பிள்ளைக்கு நடந்த கொடூர சம்பவம் : கதறிய மனைவி!!

271

தமிழகத்தின்..

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ், இவரது மகன் சாலமன்(வயது 24). இவருக்கும், திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நேற்று மாலை சாலமன் நாவற்குளம் பகுதியில் உள்ள கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் சாலமனை நோக்கி அரிவாள், கத்தியுடன் சென்றனர்.

இவர்களை பார்த்ததும் சாலமன் ஓட்டம்பிடித்தார், அவரை விரட்டிபிடித்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலிஸ் அதிகாரிகள் சாலமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சாலமனுக்கும், நாவற்குளத்தை சேர்ந்த ரகு என்பவருக்கும் தகராறு இருந்து வந்ததும், கடந்த சில நாட்களாக மோதல் நீடித்து வந்ததும் தெரியவந்தது.

இதன் காரணமாகவே சாலமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர், மேலும் ரகு உட்பட 7 பேர் கொண்ட கும்பலையும் தேடி வருகின்றனர்.